Job 22 in Tamil
யோபு 22
- 1
அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
Then Eliphaz the Temanite answered and said,
- 2
ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
Can a man be profitable unto God, as he that is wise may be profitable unto himself?
- 3
நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
[Is it] any pleasure to the Almighty, that thou art righteous? or [is it] gain [to him], that thou makest thy ways perfect?
- 4
அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
Will he reprove thee for fear of thee? will he enter with thee into judgment?
- 5
உம்முடைய பொல்லாப்புப் பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
[Is] not thy wickedness great? and thine iniquities infinite?
- 6
முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
For thou hast taken a pledge from thy brother for nought, and stripped the naked of their clothing.
- 7
விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர்.
Thou hast not given water to the weary to drink, and thou hast withholden bread from the hungry.
- 8
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
But [as for] the mighty man, he had the earth; and the honourable man dwelt in it.
- 9
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
Thou hast sent widows away empty, and the arms of the fatherless have been broken.
- 10
ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
Therefore snares [are] round about thee, and sudden fear troubleth thee;
- 11
நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
Or darkness, [that] thou canst not see; and abundance of waters cover thee.
- 12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
[Is] not God in the height of heaven? and behold the height of the stars, how high they are!
- 13
நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
And thou sayest, How doth God know? can he judge through the dark cloud?
- 14
அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
Thick clouds [are] a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven.
- 15
அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
Hast thou marked the old way which wicked men have trodden?
- 16
காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
Which were cut down out of time, whose foundation was overflown with a flood:
- 17
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
Which said unto God, Depart from us: and what can the Almighty do for them?
- 18
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
Yet he filled their houses with good [things:] but the counsel of the wicked is far from me.
- 19
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
The righteous see [it], and are glad: and the innocent laugh them to scorn.
- 20
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
Whereas our substance is not cut down, but the remnant of them the fire consumeth.
- 21
நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
Acquaint now thyself with him, and be at peace: thereby good shall come unto thee.
- 22
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
Receive, I pray thee, the law from his mouth, and lay up his words in thine heart.
- 23
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத்தூரமாக்குவீர்.
If thou return to the Almighty, thou shalt be built up, thou shalt put away iniquity far from thy tabernacles.
- 24
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
Then shalt thou lay up gold as dust, and the [gold] of Ophir as the stones of the brooks.
- 25
அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.
Yea, the Almighty shall be thy defence, and thou shalt have plenty of silver.
- 26
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
For then shalt thou have thy delight in the Almighty, and shalt lift up thy face unto God.
- 27
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவி கொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
Thou shalt make thy prayer unto him, and he shall hear thee, and thou shalt pay thy vows.
- 28
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
Thou shalt also decree a thing, and it shall be established unto thee: and the light shall shine upon thy ways.
- 29
மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
When [men] are cast down, then thou shalt say, [There is] lifting up; and he shall save the humble person.
- 30
குற்றமற்றிராதவனையுங்கூடத்தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப் போவான் என்றான்.
He shall deliver the island of the innocent: and it is delivered by the pureness of thine hands.