Job 27 in Tamil
யோபு 27
- 1
யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
Moreover Job continued his parable, and said,
- 2
என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
[As] God liveth, [who] hath taken away my judgment; and the Almighty, [who] hath vexed my soul;
- 3
என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
All the while my breath [is] in me, and the spirit of God [is] in my nostrils;
- 4
என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
My lips shall not speak wickedness, nor my tongue utter deceit.
- 5
நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.
God forbid that I should justify you: till I die I will not remove mine integrity from me.
- 6
என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டு விடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
My righteousness I hold fast, and will not let it go: my heart shall not reproach [me] so long as I live.
- 7
என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.
Let mine enemy be as the wicked, and he that riseth up against me as the unrighteous.
- 8
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
For what [is] the hope of the hypocrite, though he hath gained, when God taketh away his soul?
- 9
ஆபத்து அவன்மேல் வரும்போது தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
Will God hear his cry when trouble cometh upon him?
- 10
அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
Will he delight himself in the Almighty? will he always call upon God?
- 11
தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
I will teach you by the hand of God: [that] which [is] with the Almighty will I not conceal.
- 12
இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
Behold, all ye yourselves have seen [it;] why then are ye thus altogether vain?
- 13
பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
This [is] the portion of a wicked man with God, and the heritage of oppressors, [which] they shall receive of the Almighty.
- 14
அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
If his children be multiplied, [it is] for the sword: and his offspring shall not be satisfied with bread.
- 15
அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
Those that remain of him shall be buried in death: and his widows shall not weep.
- 16
அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
Though he heap up silver as the dust, and prepare raiment as the clay;
- 17
அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
He may prepare [it], but the just shall put [it] on, and the innocent shall divide the silver.
- 18
அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும்.
He buildeth his house as a moth, and as a booth [that] the keeper maketh.
- 19
அவன் ஐசுவரியவனாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he [is] not.
- 20
வெள்ளத்தைப்போலத் திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
Terrors take hold on him as waters, a tempest stealeth him away in the night.
- 21
கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
The east wind carrieth him away, and he departeth: and as a storm hurleth him out of his place.
- 22
அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.
For [God] shall cast upon him, and not spare: he would fain flee out of his hand.
- 23
ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள்.
[Men] shall clap their hands at him, and shall hiss him out of his place.