Proverbs 29:3 in Tamil
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
Njaanaththil piriyappadugiravan than thagappanai magizhappannugiraan; vaesigalodae thonthippaanavano aasthiyai azhikkiraan.
Proverbs 29:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- ஞானத்தை விரும்புகிறவன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்; ஆனால் விபசாரிகளுடன் கூட்டாளியாய் இருப்பவன் தன்னுடைய செல்வத்தைச் சீரழிக்கிறான்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் ஞானத்தை விரும்பினால் அவனது தந்தை மகிழ்ச்சி அடைவார். ஆனால் தன் செல்வத்தை விபச்சாரிகளிடம் செலவிடுபவன் தன் செல்வத்தை எல்லாம் இழப்பான்.
Proverbs 29:3 in English
- King James Version (KJV)
- Whoso loveth wisdom rejoiceth his father: but he that keepeth company with harlots spendeth [his] substance.
- World English Bible (WEB)
- Whoever loves wisdom brings joy to his father; but a companion of prostitutes squanders his wealth.
- American Standard Version (ASV)
- Whoso loveth wisdom rejoiceth his father; But he that keepeth company with harlots wasteth [his] substance.
- Bible in Basic English (BBE)
- A man who is a lover of wisdom is a joy to his father: but he who goes in the company of loose women is a waster of wealth.
- Darby Translation (DBY)
- Whoso loveth wisdom rejoiceth his father; but he that is a companion of harlots destroyeth [his] substance.
- Webster's Bible (WBS)
- He that loveth wisdom rejoiceth his father: but he that keepeth company with harlots spendeth [his] substance.
- Young's Literal Translation (YLT)
- A man loving wisdom rejoiceth his father, And a friend of harlots destroyeth wealth.
Read in context
- 1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
- 2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
- 3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
- 4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
- 5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
Cross references
- Proverbs 27:11 நீதிமொழிகள் 27:11என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
- Proverbs 15:20 நீதிமொழிகள் 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
- Proverbs 10:1 நீதிமொழிகள் 10:1சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.
- Luke 15:30 லூக்கா 15:30வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
- Luke 15:13 லூக்கா 15:13சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
- Proverbs 28:7 நீதிமொழிகள் 28:7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
- Proverbs 6:26 நீதிமொழிகள் 6:26வேசியினிமித்தம் ஒரு அப்பத் துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
- Proverbs 21:17 நீதிமொழிகள் 21:17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
- Proverbs 5:8–10 நீதிமொழிகள் 5:8–10உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
- Proverbs 23:24–25 நீதிமொழிகள் 23:24–25நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப்பெற்றவள்மகிழுவாள்.
- Proverbs 23:15 நீதிமொழிகள் 23:15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
- Proverbs 21:20 நீதிமொழிகள் 21:20வேண்டிய திரவியமும் எண்ணெயும்ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.