Job 6:14 in Tamil
உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப்பயப்படாதே போகிறான்.
Ubaathikkappadugiravanukku avanudaiya sinaegithanaal thayaigidaikkavaendum; avano sarvavallavarukkuppayappadaathae pogiraan.
Job 6:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான்.
- Open Tamil Contemporary Version
- “எதிர்பார்ப்பில்லாதவன், எல்லாம் வல்லவரைப் பற்றிய பயத்தைக் கைவிட்ட போதிலும், அவனுக்கு அவனுடைய நண்பர்களின் தயவு இருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும். ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்.
Job 6:14 in English
- King James Version (KJV)
- To him that is afflicted pity [should be shewed] from his friend; but he forsaketh the fear of the Almighty.
- World English Bible (WEB)
- “To him who is ready to faint, kindness should be shown from his friend; even to him who forsakes the fear of the Almighty.
- American Standard Version (ASV)
- To him that is ready to faint kindness [should be showed] from his friend; Even to him that forsaketh the fear of the Almighty.
- Bible in Basic English (BBE)
- He whose heart is shut against his friend has given up the fear of the Ruler of all.
- Darby Translation (DBY)
- For him that is fainting kindness [is meet] from his friend; or he forsaketh the fear of the Almighty.
- Webster's Bible (WBS)
- To him that is afflicted pity [should be shown] from his friend; but he forsaketh the fear of the Almighty.
- Young's Literal Translation (YLT)
- To a despiser of his friends [is] shame, And the fear of the Mighty he forsaketh.
Read in context
- 12என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
- 13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னை விட்டுநீங்கிற்றே.
- 14உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப்பயப்படாதே போகிறான்.
- 15என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
- 16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
Cross references
- Proverbs 17:17 நீதிமொழிகள் 17:17சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
- Galatians 6:2 கலாத்தியர் 6:2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
- 1 Corinthians 12:26 1 கொரிந்தியர் 12:26ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
- Romans 12:15 ரோமர் 12:15சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
- Luke 23:40 லூக்கா 23:40மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
- Hebrews 13:3 எபிரெயர் 13:3கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களைநினைத்துக்கொள்ளுங்கள்.
- 2 Corinthians 11:29 2 கொரிந்தியர் 11:29ஒருவன் பலவீனனானால் நானும் பலவீணனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
- Job 4:3–5 யோபு 4:3–5இதோ, நீர அநேகருக்குப் புத்தி சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர். விழுகிறவனை உம்முடைய வாரத்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். இப்பொழுதோ துன்பம் உமக்குநேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
- Job 19:21 யோபு 19:21என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
- Job 15:4 யோபு 15:4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
- Job 16:5 யோபு 16:5ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
- Psalm 36:1–3 சங்கீதம் 36:1–3துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.