John 6:19 in Tamil
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
Avarkal aerakkuraiya moondru naalu mailthooram thanduvaliththup pona pozhuthu, yesu kadalinmael nadanthu, padavukkus sameebamaay varugirathaik kandu payanthaarkal.
John 6:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் தூரம்வரை கட்டுப்படுத்திச் சென்றுகொண்டிருந்தபோது, இயேசு கடலின்மேல் நடந்து படகின் அருகில் வந்தார்; அவர்கள் அவரைக்கண்டு பயந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர்.
John 6:19 in English
- King James Version (KJV)
- So when they had rowed about five and twenty or thirty furlongs, they see Jesus walking on the sea, and drawing nigh unto the ship: and they were afraid.
- World English Bible (WEB)
- When therefore they had rowed about twenty-five or thirty stadia, they saw Jesus walking on the sea and drawing near to the boat; and they were afraid.
- American Standard Version (ASV)
- When therefore they had rowed about five and twenty or thirty furlongs, they behold Jesus walking on the sea, and drawing nigh unto the boat: and they were afraid.
- Bible in Basic English (BBE)
- After they had gone three or four miles they saw Jesus walking on the sea and coming near to the boat; and they had great fear.
- Darby Translation (DBY)
- Having rowed then about twenty-five or thirty stadia, they see Jesus walking on the sea and coming near the ship; and they were frightened.
- Webster's Bible (WBS)
- So when they had rowed about five and twenty or thirty furlongs, they see Jesus walking on the sea, and drawing nigh to the boat: and they were afraid.
- Young's Literal Translation (YLT)
- having pushed onwards, therefore, about twenty-five or thirty furlongs, they behold Jesus walking on the sea, and coming nigh to the boat, and they were afraid;
Read in context
- 17படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
- 18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
- 19அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
- 20அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.
- 21அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
Cross references
- Mark 6:47–49 மாற்கு 6:47–49சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர் போல் காணப்பட்டார். அவர் கடலின் மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
- Matthew 14:25–26 மத்தேயு 14:25–26இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
- Psalm 93:4 சங்கீதம் 93:4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
- John 14:18 யோவான் 14:18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
- Job 9:8 யோபு 9:8அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
- Jonah 1:13 யோனா 1:13அந்த மனிஷர் கரைசேரும்படிவேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க்கொந்தளித்துக் கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.
- Ezekiel 27:26 எசேக்கியேல் 27:26தண்டுவலிக்கிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
- Psalm 29:10 சங்கீதம் 29:10கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
- Luke 24:36–39 லூக்கா 24:36–39இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
- John 11:18 யோவான் 11:18பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல்தூரத்திலிருந்தது.
- Revelation 14:20 வெளிப்படுத்தின விசேஷம் 14:20நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதிதூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும்பெருகிவந்தது. அதிகாரம்
- Revelation 21:16 வெளிப்படுத்தின விசேஷம் 21:16அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
Original words (Greek)
- when · G3767οὖν oûn
- rowed · G1643ἐλαύνω elaúnō
- about · G5613ὡς hōs
- twenty · G1501εἴκοσι eíkosi
- or · G2228ἤ ḗ
- thirty · G5144τριάκοντα triákonta
- furlongs · G4712στάδιον stádion
- see · G2334θεωρέω theōréō
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- walking · G4043περιπατέω peripatéō
- on · G1909ἐπί epí
- sea · G2281θάλασσα thálassa
- and · G2532καί kaí
- drawing · G1096γίνομαι gínomai
- nigh · G1451ἐγγύς engýs
- ship · G4143πλοῖον ploîon
- and · G2532καί kaí
- afraid · G5399φοβέω phobéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.