Job 12 in Tamil
யோபு 12
- 1
யோபு பிரதியுத்தரமாக:
And Job answered and said,
- 2
ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
No doubt but ye [are] the people, and wisdom shall die with you.
- 3
உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
But I have understanding as well as you; I [am] not inferior to you: yea, who knoweth not such things as these?
- 4
என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
I am [as] one mocked of his neighbour, who calleth upon God, and he answereth him: the just upright [man is] laughed to scorn.
- 5
ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
He that is ready to slip with [his] feet [is as] a lamp despised in the thought of him that is at ease.
- 6
கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
The tabernacles of robbers prosper, and they that provoke God are secure; into whose hand God bringeth [abundantly].
- 7
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும்.
But ask now the beasts, and they shall teach thee; and the fowls of the air, and they shall tell thee:
- 8
அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
Or speak to the earth, and it shall teach thee: and the fishes of the sea shall declare unto thee.
- 9
கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
Who knoweth not in all these that the hand of the LORD hath wrought this?
- 10
சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
In whose hand [is] the soul of every living thing, and the breath of all mankind.
- 11
வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
Doth not the ear try words? and the mouth taste his meat?
- 12
முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
With the ancient [is] wisdom; and in length of days understanding.
- 13
அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
With him [is] wisdom and strength, he hath counsel and understanding.
- 14
இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
Behold, he breaketh down, and it cannot be built again: he shutteth up a man, and there can be no opening.
- 15
இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
Behold, he withholdeth the waters, and they dry up: also he sendeth them out, and they overturn the earth.
- 16
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
With him [is] strength and wisdom: the deceived and the deceiver [are] his.
- 17
அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
He leadeth counsellors away spoiled, and maketh the judges fools.
- 18
அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
He looseth the bond of kings, and girdeth their loins with a girdle.
- 19
அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
He leadeth princes away spoiled, and overthroweth the mighty.
- 20
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப் போடுகிறார்.
He removeth away the speech of the trusty, and taketh away the understanding of the aged.
- 21
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
He poureth contempt upon princes, and weakeneth the strength of the mighty.
- 22
அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
He discovereth deep things out of darkness, and bringeth out to light the shadow of death.
- 23
அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
He increaseth the nations, and destroyeth them: he enlargeth the nations, and straiteneth them [again].
- 24
அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
He taketh away the heart of the chief of the people of the earth, and causeth them to wander in a wilderness [where there is] no way.
- 25
அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.
They grope in the dark without light, and he maketh them to stagger like [a] drunken [man].