Job 15 in Tamil
யோபு 15
- 1
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
Then answered Eliphaz the Temanite, and said,
- 2
ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
Should a wise man utter vain knowledge, and fill his belly with the east wind?
- 3
பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
Should he reason with unprofitable talk? or with speeches wherewith he can do no good?
- 4
நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
Yea, thou castest off fear, and restrainest prayer before God.
- 5
உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
For thy mouth uttereth thine iniquity, and thou choosest the tongue of the crafty.
- 6
நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
Thine own mouth condemneth thee, and not I: yea, thine own lips testify against thee.
- 7
மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
[Art] thou the first man [that] was born? or wast thou made before the hills?
- 8
நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
Hast thou heard the secret of God? and dost thou restrain wisdom to thyself?
- 9
நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
What knowest thou, that we know not? [what] understandest thou, which [is] not in us?
- 10
உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
With us [are] both the grayheaded and very aged men, much elder than thy father.
- 11
தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ?
[Are] the consolations of God small with thee? is there any secret thing with thee?
- 12
உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
Why doth thine heart carry thee away? and what do thy eyes wink at,
- 13
தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
That thou turnest thy spirit against God, and lettest [such] words go out of thy mouth?
- 14
மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
What [is] man, that he should be clean? and [he which is] born of a woman, that he should be righteous?
- 15
இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
Behold, he putteth no trust in his saints; yea, the heavens are not clean in his sight.
- 16
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
How much more abominable and filthy [is] man, which drinketh iniquity like water?
- 17
உமக்குக் காரியத்தைத் தெரியப் பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
I will shew thee, hear me; and that [which] I have seen I will declare;
- 18
ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
Which wise men have told from their fathers, and have not hid [it:]
- 19
அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை
Unto whom alone the earth was given, and no stranger passed among them.
- 20
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுக்கிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
The wicked man travaileth with pain all [his] days, and the number of years is hidden to the oppressor.
- 21
பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான்.
A dreadful sound [is] in his ears: in prosperity the destroyer shall come upon him.
- 22
இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
He believeth not that he shall return out of darkness, and he is waited for of the sword.
- 23
அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
He wandereth abroad for bread, [saying], Where [is it]? he knoweth that the day of darkness is ready at his hand.
- 24
இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனானராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
Trouble and anguish shall make him afraid; they shall prevail against him, as a king ready to the battle.
- 25
அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
For he stretcheth out his hand against God, and strengtheneth himself against the Almighty.
- 26
கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
He runneth upon him, [even] on [his] neck, upon the thick bosses of his bucklers:
- 27
அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
Because he covereth his face with his fatness, and maketh collops of fat on [his] flanks.
- 28
ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
And he dwelleth in desolate cities, [and] in houses which no man inhabiteth, which are ready to become heaps.
- 29
அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection thereof upon the earth.
- 30
இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான.
He shall not depart out of darkness; the flame shall dry up his branches, and by the breath of his mouth shall he go away.
- 31
வழிதப்பினவன் மாயையை நம் பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompence.
- 32
அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
It shall be accomplished before his time, and his branch shall not be green.
- 33
பிஞ்சுகள் உதிர்ந்துபோகிறதிராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
He shall shake off his unripe grape as the vine, and shall cast off his flower as the olive.
- 34
மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
For the congregation of hypocrites [shall be] desolate, and fire shall consume the tabernacles of bribery.
- 35
அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான் அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
They conceive mischief, and bring forth vanity, and their belly prepareth deceit.