Proverbs 5 in Tamil
நீதிமொழிகள் 5
- 1
என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
My son, attend unto my wisdom, [and] bow thine ear to my understanding:
- 2
அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
That thou mayest regard discretion, and [that] thy lips may keep knowledge.
- 3
பரஸ்திர்⟨P⟩யின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
For the lips of a strange woman drop [as] an honeycomb, and her mouth [is] smoother than oil:
- 4
அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
But her end is bitter as wormwood, sharp as a twoedged sword.
- 5
அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
Her feet go down to death; her steps take hold on hell.
- 6
நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
Lest thou shouldest ponder the path of life, her ways are moveable, [that] thou canst not know [them].
- 7
ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.
Hear me now therefore, O ye children, and depart not from the words of my mouth.
- 8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.
Remove thy way far from her, and come not nigh the door of her house:
- 9
சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
Lest thou give thine honour unto others, and thy years unto the cruel:
- 10
அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
Lest strangers be filled with thy wealth; and thy labours [be] in the house of a stranger;
- 11
முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
And thou mourn at the last, when thy flesh and thy body are consumed,
- 12
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
And say, How have I hated instruction, and my heart despised reproof;
- 13
என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!
And have not obeyed the voice of my teachers, nor inclined mine ear to them that instructed me!
- 14
சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும்கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
I was almost in all evil in the midst of the congregation and assembly.
- 15
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும்பானம்பண்ணு.
Drink waters out of thine own cistern, and running waters out of thine own well.
- 16
உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
Let thy fountains be dispersed abroad, [and] rivers of waters in the streets.
- 17
அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.
Let them be only thine own, and not strangers’ with thee.
- 18
உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
Let thy fountain be blessed: and rejoice with the wife of thy youth.
- 19
அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும்போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
[Let her be as] the loving hind and pleasant roe; let her breasts satisfy thee at all times; and be thou ravished always with her love.
- 20
என் மகனே, நீ பரஸ்திர்⟨P⟩யின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
- 21
மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
For the ways of man [are] before the eyes of the LORD, and he pondereth all his goings.
- 22
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
His own iniquities shall take the wicked himself, and he shall be holden with the cords of his sins.
- 23
அவன் புத்தியைக் கேளாததினால்மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
He shall die without instruction; and in the greatness of his folly he shall go astray.