Proverbs 6 in Tamil
நீதிமொழிகள் 6
- 1
என் மகனே, நீ உன் சினேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
My son, if thou be surety for thy friend, [if] thou hast stricken thy hand with a stranger,
- 2
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
Thou art snared with the words of thy mouth, thou art taken with the words of thy mouth.
- 3
இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய்.
Do this now, my son, and deliver thyself, when thou art come into the hand of thy friend; go, humble thyself, and make sure thy friend.
- 4
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
Give not sleep to thine eyes, nor slumber to thine eyelids.
- 5
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
Deliver thyself as a roe from the hand [of the hunter], and as a bird from the hand of the fowler.
- 6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:
- 7
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
Which having no guide, overseer, or ruler,
- 8
கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
Provideth her meat in the summer, [and] gathereth her food in the harvest.
- 9
சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம்படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
How long wilt thou sleep, O sluggard? when wilt thou arise out of thy sleep?
- 10
இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
[Yet] a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
- 11
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆதமணிந்தவனைப்போலவும் வரும்.
So shall thy poverty come as one that travelleth, and thy want as an armed man.
- 12
பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
A naughty person, a wicked man, walketh with a froward mouth.
- 13
அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;
- 14
அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப்பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
Frowardness [is] in his heart, he deviseth mischief continually; he soweth discord.
- 15
ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
Therefore shall his calamity come suddenly; suddenly shall he be broken without remedy.
- 16
ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
These six [things] doth the LORD hate: yea, seven [are] an abomination unto him:
- 17
அவையாவன: மேட்டிமையானகண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
A proud look, a lying tongue, and hands that shed innocent blood,
- 18
துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
An heart that deviseth wicked imaginations, feet that be swift in running to mischief,
- 19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
A false witness [that] speaketh lies, and he that soweth discord among brethren.
- 20
என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
My son, keep thy father’s commandment, and forsake not the law of thy mother:
- 21
அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
Bind them continually upon thine heart, [and] tie them about thy neck.
- 22
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
When thou goest, it shall lead thee; when thou sleepest, it shall keep thee; and [when] thou awakest, it shall talk with thee.
- 23
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.
For the commandment [is] a lamp; and the law [is] light; and reproofs of instruction [are] the way of life:
- 24
அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திர்⟨P⟩க்கும் விலக்கிக் காக்கும்.
To keep thee from the evil woman, from the flattery of the tongue of a strange woman.
- 25
உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
Lust not after her beauty in thine heart; neither let her take thee with her eyelids.
- 26
வேசியினிமித்தம் ஒரு அப்பத் துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
For by means of a whorish woman [a man is brought] to a piece of bread: and the adulteress will hunt for the precious life.
- 27
தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
Can a man take fire in his bosom, and his clothes not be burned?
- 28
தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
Can one go upon hot coals, and his feet not be burned?
- 29
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
So he that goeth in to his neighbour’s wife; whosoever toucheth her shall not be innocent.
- 30
திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
[Men] do not despise a thief, if he steal to satisfy his soul when he is hungry;
- 31
அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
But [if] he be found, he shall restore sevenfold; he shall give all the substance of his house.
- 32
ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
[But] whoso committeth adultery with a woman lacketh understanding: he [that] doeth it destroyeth his own soul.
- 33
வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.
A wound and dishonour shall he get; and his reproach shall not be wiped away.
- 34
ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
For jealousy [is] the rage of a man: therefore he will not spare in the day of vengeance.
- 35
அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
He will not regard any ransom; neither will he rest content, though thou givest many gifts.