Job 29 in Tamil
யோபு 29
- 1
பின்னும் யோபு தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
Moreover Job continued his parable, and said,
- 2
சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்தசீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
Oh that I were as [in] months past, as [in] the days [when] God preserved me;
- 3
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
When his candle shined upon my head, [and when] by his light I walked [through] darkness;
- 4
தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
As I was in the days of my youth, when the secret of God [was] upon my tabernacle;
- 5
அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
When the Almighty [was] yet with me, [when] my children [were] about me;
- 6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடி வந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
When I washed my steps with butter, and the rock poured me out rivers of oil;
- 7
நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
When I went out to the gate through the city, [when] I prepared my seat in the street!
- 8
வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
The young men saw me, and hid themselves: and the aged arose, [and] stood up.
- 9
பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
The princes refrained talking, and laid [their] hand on their mouth.
- 10
பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
The nobles held their peace, and their tongue cleaved to the roof of their mouth.
- 11
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
When the ear heard [me], then it blessed me; and when the eye saw [me], it gave witness to me:
- 12
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
Because I delivered the poor that cried, and the fatherless, and [him that had] none to help him.
- 13
கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
The blessing of him that was ready to perish came upon me: and I caused the widow’s heart to sing for joy.
- 14
நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
I put on righteousness, and it clothed me: my judgment [was] as a robe and a diadem.
- 15
நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
I was eyes to the blind, and feet [was] I to the lame.
- 16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
I [was] a father to the poor: and the cause [which] I knew not I searched out.
- 17
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
And I brake the jaws of the wicked, and plucked the spoil out of his teeth.
- 18
என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
Then I said, I shall die in my nest, and I shall multiply [my] days as the sand.
- 19
என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.
My root [was] spread out by the waters, and the dew lay all night upon my branch.
- 20
என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
My glory [was] fresh in me, and my bow was renewed in my hand.
- 21
எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
Unto me [men] gave ear, and waited, and kept silence at my counsel.
- 22
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
After my words they spake not again; and my speech dropped upon them.
- 23
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
And they waited for me as for the rain; and they opened their mouth wide [as] for the latter rain.
- 24
நான் அவர்களைப் பார்த்துநகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையைமாறச்செய்யவும் இல்லை.
[If] I laughed on them, they believed [it] not; and the light of my countenance they cast not down.
- 25
அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள்ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
I chose out their way, and sat chief, and dwelt as a king in the army, as one [that] comforteth the mourners.