Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14 in Tamil

Present
  1. 1

    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோதன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

    Every wise woman buildeth her house: but the foolish plucketh it down with her hands.

  2. 2

    நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.

    He that walketh in his uprightness feareth the LORD: but [he that is] perverse in his ways despiseth him.

  3. 3

    மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

    In the mouth of the foolish [is] a rod of pride: but the lips of the wise shall preserve them.

  4. 4

    எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

    Where no oxen [are], the crib [is] clean: but much increase [is] by the strength of the ox.

  5. 5

    மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

    A faithful witness will not lie: but a false witness will utter lies.

  6. 6

    பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

    A scorner seeketh wisdom, and [findeth it] not: but knowledge [is] easy unto him that understandeth.

  7. 7

    மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கேகாணாய்.

    Go from the presence of a foolish man, when thou perceivest not [in him] the lips of knowledge.

  8. 8

    தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

    The wisdom of the prudent [is] to understand his way: but the folly of fools [is] deceit.

  9. 9

    மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

    Fools make a mock at sin: but among the righteous [there is] favour.

  10. 10

    இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

    The heart knoweth his own bitterness; and a stranger doth not intermeddle with his joy.

  11. 11

    துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

    The house of the wicked shall be overthrown: but the tabernacle of the upright shall flourish.

  12. 12

    மனுஷனுக்குத் செம்மையாய்த்தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

    There is a way which seemeth right unto a man, but the end thereof [are] the ways of death.

  13. 13

    நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

    Even in laughter the heart is sorrowful; and the end of that mirth [is] heaviness.

  14. 14

    பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்; நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

    The backslider in heart shall be filled with his own ways: and a good man [shall be satisfied] from himself.

  15. 15

    பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

    The simple believeth every word: but the prudent [man] looketh well to his going.

  16. 16

    ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

    A wise [man] feareth, and departeth from evil: but the fool rageth, and is confident.

  17. 17

    முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

    [He that is] soon angry dealeth foolishly: and a man of wicked devices is hated.

  18. 18

    பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

    The simple inherit folly: but the prudent are crowned with knowledge.

  19. 19

    தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

    The evil bow before the good; and the wicked at the gates of the righteous.

  20. 20

    தரித்திரன் தனக்கடுத்தவனாலும்பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.

    The poor is hated even of his own neighbour: but the rich [hath] many friends.

  21. 21

    பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

    He that despiseth his neighbour sinneth: but he that hath mercy on the poor, happy [is] he.

  22. 22

    தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

    Do they not err that devise evil? but mercy and truth [shall be] to them that devise good.

  23. 23

    சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

    In all labour there is profit: but the talk of the lips [tendeth] only to penury.

  24. 24

    ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

    The crown of the wise [is] their riches: [but] the foolishness of fools [is] folly.

  25. 25

    மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர் களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

    A true witness delivereth souls: but a deceitful [witness] speaketh lies.

  26. 26

    கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

    In the fear of the LORD [is] strong confidence: and his children shall have a place of refuge.

  27. 27

    கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவ ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

    The fear of the LORD [is] a fountain of life, to depart from the snares of death.

  28. 28

    ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

    In the multitude of people [is] the king’s honour: but in the want of people [is] the destruction of the prince.

  29. 29

    நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தைவிளங்கப்பண்ணுகிறான்.

    [He that is] slow to wrath [is] of great understanding: but [he that is] hasty of spirit exalteth folly.

  30. 30

    சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

    A sound heart [is] the life of the flesh: but envy the rottenness of the bones.

  31. 31

    தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

    He that oppresseth the poor reproacheth his Maker: but he that honoureth him hath mercy on the poor.

  32. 32

    துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

    The wicked is driven away in his wickedness: but the righteous hath hope in his death.

  33. 33

    புத்திமானுடைய இருதயத்தில்ஞானம் தங்கும்: மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

    Wisdom resteth in the heart of him that hath understanding: but [that which is] in the midst of fools is made known.

  34. 34

    நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

    Righteousness exalteth a nation: but sin [is] a reproach to any people.

  35. 35

    ராஜாவின் தயை விவேகமுள்ளபணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன்மேலிருக்கும்.

    The king’s favour [is] toward a wise servant: but his wrath is [against] him that causeth shame.

All chapters of Proverbs · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.