Proverbs 3 in Tamil
நீதிமொழிகள் 3
- 1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
My son, forget not my law; but let thine heart keep my commandments:
- 2
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
For length of days, and long life, and peace, shall they add to thee.
- 3
கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டுவிலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
Let not mercy and truth forsake thee: bind them about thy neck; write them upon the table of thine heart:
- 4
அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
So shalt thou find favour and good understanding in the sight of God and man.
- 5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
Trust in the LORD with all thine heart; and lean not unto thine own understanding.
- 6
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
In all thy ways acknowledge him, and he shall direct thy paths.
- 7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டுவிலகு.
Be not wise in thine own eyes: fear the LORD, and depart from evil.
- 8
அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
It shall be health to thy navel, and marrow to thy bones.
- 9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
Honour the LORD with thy substance, and with the firstfruits of all thine increase:
- 10
அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
So shall thy barns be filled with plenty, and thy presses shall burst out with new wine.
- 11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:
- 12
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
For whom the LORD loveth he correcteth; even as a father the son [in whom] he delighteth.
- 13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
Happy [is] the man [that] findeth wisdom, and the man [that] getteth understanding.
- 14
அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
For the merchandise of it [is] better than the merchandise of silver, and the gain thereof than fine gold.
- 15
முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
She [is] more precious than rubies: and all the things thou canst desire are not to be compared unto her.
- 16
அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
Length of days [is] in her right hand; [and] in her left hand riches and honour.
- 17
அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
Her ways [are] ways of pleasantness, and all her paths [are] peace.
- 18
அது தன்னை அடைந்தவர்களுக்குஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
She [is] a tree of life to them that lay hold upon her: and happy [is every one] that retaineth her.
- 19
கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
The LORD by wisdom hath founded the earth; by understanding hath he established the heavens.
- 20
அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
By his knowledge the depths are broken up, and the clouds drop down the dew.
- 21
என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும்காத்துக்கொள்.
My son, let not them depart from thine eyes: keep sound wisdom and discretion:
- 22
அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
So shall they be life unto thy soul, and grace to thy neck.
- 23
அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
Then shalt thou walk in thy way safely, and thy foot shall not stumble.
- 24
நீபடுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
When thou liest down, thou shalt not be afraid: yea, thou shalt lie down, and thy sleep shall be sweet.
- 25
சடிதியான திகிலும், துஷ்டர்களின்பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
Be not afraid of sudden fear, neither of the desolation of the wicked, when it cometh.
- 26
கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken.
- 27
நன்மைசெய்யும்படிஉனக்குத்திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
Withhold not good from them to whom it is due, when it is in the power of thine hand to do [it].
- 28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.
- 29
அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
Devise not evil against thy neighbour, seeing he dwelleth securely by thee.
- 30
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
Strive not with a man without cause, if he have done thee no harm.
- 31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Envy thou not the oppressor, and choose none of his ways.
- 32
மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
For the froward [is] abomination to the LORD: but his secret [is] with the righteous.
- 33
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம்இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
The curse of the LORD [is] in the house of the wicked: but he blesseth the habitation of the just.
- 34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
Surely he scorneth the scorners: but he giveth grace unto the lowly.
- 35
ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
The wise shall inherit glory: but shame shall be the promotion of fools.