Job 41 in Tamil
யோபு 41
- 1
லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
Canst thou draw out leviathan with an hook? or his tongue with a cord [which] thou lettest down?
- 2
அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?
Canst thou put an hook into his nose? or bore his jaw through with a thorn?
- 3
அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ் செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ?
Will he make many supplications unto thee? will he speak soft [words] unto thee?
- 4
அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?
Will he make a covenant with thee? wilt thou take him for a servant for ever?
- 5
ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலேகட்டிவைப்பாயோ?
Wilt thou play with him as [with] a bird? or wilt thou bind him for thy maidens?
- 6
கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
Shall the companions make a banquet of him? shall they part him among the merchants?
- 7
நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
Canst thou fill his skin with barbed irons? or his head with fish spears?
- 8
அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
Lay thine hand upon him, remember the battle, do no more.
- 9
இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
Behold, the hope of him is in vain: shall not [one] be cast down even at the sight of him?
- 10
அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
None [is so] fierce that dare stir him up: who then is able to stand before me?
- 11
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
Who hath prevented me, that I should repay [him? whatsoever is] under the whole heaven is mine.
- 12
அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
I will not conceal his parts, nor his power, nor his comely proportion.
- 13
அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
Who can discover the face of his garment? [or] who can come [to him] with his double bridle?
- 14
அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
Who can open the doors of his face? his teeth [are] terrible round about.
- 15
முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்புமகா சிறப்பாயிருக்கிறது.
[His] scales [are his] pride, shut up together [as with] a close seal.
- 16
அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
One is so near to another, that no air can come between them.
- 17
அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது.
They are joined one to another, they stick together, that they cannot be sundered.
- 18
அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின்புருவங்களைப்போல் இருக்கிறது.
By his neesings a light doth shine, and his eyes [are] like the eyelids of the morning.
- 19
அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
Out of his mouth go burning lamps, [and] sparks of fire leap out.
- 20
கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
Out of his nostrils goeth smoke, as [out] of a seething pot or caldron.
- 21
அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
His breath kindleth coals, and a flame goeth out of his mouth.
- 22
அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.
In his neck remaineth strength, and sorrow is turned into joy before him.
- 23
அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
The flakes of his flesh are joined together: they are firm in themselves; they cannot be moved.
- 24
அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
His heart is as firm as a stone; yea, as hard as a piece of the nether [millstone].
- 25
அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
When he raiseth up himself, the mighty are afraid: by reason of breakings they purify themselves.
- 26
அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
The sword of him that layeth at him cannot hold: the spear, the dart, nor the habergeon.
- 27
அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
He esteemeth iron as straw, [and] brass as rotten wood.
- 28
அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
The arrow cannot make him flee: slingstones are turned with him into stubble.
- 29
அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
Darts are counted as stubble: he laugheth at the shaking of a spear.
- 30
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
Sharp stones [are] under him: he spreadeth sharp pointed things upon the mire.
- 31
அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
He maketh the deep to boil like a pot: he maketh the sea like a pot of ointment.
- 32
அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
He maketh a path to shine after him; [one] would think the deep [to be] hoary.
- 33
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
Upon earth there is not his like, who is made without fear.
- 34
அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம்ராஜாவாயிருக்கிறது என்றார்.
He beholdeth all high [things:] he [is] a king over all the children of pride.